Thursday, 8 November 2012

கல்லைத் தொட்டு முத்தமிடுகிறீர்களே....

கல்லைத் தொட்டு முத்தமிடுகிறீர்களே




மக்கா (காஃபா)வில் உள்ள "ஹஜருல் அஸ்வத்" கல்லைத் தொட்டு முத்தமிடுகிறீர்களே! மேலும் இது சொர்க்கத்திலிருந்து வந்த கல் என்று கூறுகிறீர்களே!.. இந்து சகோதரர்களும் லிங்கம் என்னும் கல் சொர்க்கத்திலிருந்து வந்தது எனக் கூறுகிறார்கள்?

பதில்:
மக்காவில் உள்ள ஆலயமாகிய கஃபாவின் சுவரில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ள "ஹஜருல் அஸ்வத்" என்னும் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் வணங்குவதில்லை. வணங்குமாறு இஸ்லாம் கூறவுமில்லை.

ஆனால் இந்து சகோதரர்கள் லிங்கத்தை வணங்குகின்றனர்.

இது தான் முக்கியமான வித்தியாசம்.

ஒரு கல்லை வணங்குவது என்றால் அக்கல்லின் முன்னே நின்றவுடன் அதைப் பற்றி மரியாதை கலந்த பயம் தோன்ற வேண்டும். துன்பங்களை நீக்கவும், இன்பங்களை வழங்கவும் அதற்குச் சக்தி இருப்பதாக நம்ப வேண்டும். அதற்குரிய மரியாதையைத் தராவிட்டால் அந்தக் கல் நமக்கு ஏதேனும் தீங்கு செய்து விடும் என்று அச்சமிருக்க வேண்டும். நமது பிரார்த்தனை அதற்கு விளங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றெல்லாம் நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கையுடன் செய்யும் மரியாதையே வணக்கம் எனப்படும்.

கற்சிலைகளையோ, லிங்கத்தையோ, இன்ன பிற பொருட்களையோ வழிபடுவோர் இந்த நம்பிக்கையிலேயே வழிபட்டு வருகின்றனர். "ஹஜ்ருல் அஸ்வத்" பற்றி இஸ்லாம் இப்படியெல்லாம் கூறுகிறதா? நிச்சயமாக இல்லை.

அந்தக் கருப்புக் கல் நாம் பேசுவதைக் கேட்கும்; நமது பிரார்த்தனையை நிறைவேற்றும்; அதற்குரிய மரியாதையைச் செய்யத் தவறினால் அந்தக் கல் நம்மைத் தண்டிக்கும் என்றெல்லாம் இஸ்லாம் கூறவில்லை.

அது தெய்வீக அம்சம் எதுவுமில்லாத கல் என்பதை இஸ்லாம் தெளிவாகக் கூறுகிறது.

இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாவது ஆட்சியாளரும், நபிகள் நாயகத்தின் உற்ற தோழருமான உமர் (ரலி) அவர்கள் அந்தக் கல்லை முத்தமிட்டு விட்டு அதை நோக்கி "நிச்சயமாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும், தீமையும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திரா விட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்"என்று கூறினார்கள். (புகாரி: 1597, 1605)

அந்தக் கல் மீது தெய்வீக நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) ஊட்டியிருந்தால் அவர்களிடம் பாடம் கற்ற நபித் தோழர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்.

இறைவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது என்று மிகத் தெளிவாக திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறி விட்ட பின், தமது மூதாதையர்களான இப்ராஹீம் (ஆப்ரஹாம்) இஸ்மாயீல் (இஸ்மவேல்) ஆகியோரின் சிலைகள் உட்பட அத்தனை சிலைகளையும் நபிகள் நாயகம் உடைத்தெறிந்த பின் சாதாரணக் கல்லுக்கு தெய்வீக அம்சம் உண்டென்று எப்படி கூறியிருக்க முடியும்?

"ஹஜருல் அஸ்வத்" என்னும் கல்லுக்கு எந்தவிதமான ஆற்றலோ, கடவுள் தன்மையோ இல்லையென்றால் பிறகு ஏன் அதைத் தொட்டு முத்தமிட வேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டால் அது நியாயமான கேள்வியே.

அக்கல்லுக்கு கடவுள் தன்மை உள்ளது என்பது இஸ்லாத்தின் கொள்கை கிடையாது என்றாலும் அக்கல்லுக்கு வேறொரு சிறப்பு இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. அதன் காரணமாகவே அக்கல்லை முஸ்லிம்கள் முத்தமிடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள்.

இஸ்லாமிய நம்பிக்கையின் படி இவ்வுலகம் அழிக்கப்பட்ட பின் கடவுள் விசாரணை நடத்தி நல்லவர்களைச் சொர்க்கத்திலும், கெட்டவர்களை நரகத்திலும் தள்ளுவார். அந்தச் சொர்க்கத்தை அடைவது தான் முஸ்லிம்களின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் போதனை.

"ஹஜருல் அஸ்வத்" என்னும் கல் சொர்க்கத்தின் கற்களில் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

மனிதர்கள் எந்த சொர்க்கத்தை அடைவதை இறுதி இலக்காகக் கொள்ள வேண்டுமோ அந்த சொர்க்கத்தின் பொருள் ஒன்று இவ்வுலகில் காணக் கிடைக்கிறது என்றால் அதைக் காண்பதற்கும், தொடுவதற்கும் ஆவல் பிறக்கும்.

இக்கல்லைத் தவிர சொர்க்கத்துப் பொருள் எதுவும் இவ்வுலகில் கிடையாது. இவ்வுலகிலேயே காணக் கிடைக்கும் ஒரே சொர்க்கத்துப் பொருள் என்ற அடிப்படையில் தான் முஸ்லிம்களை அதைத் தொட்டு முத்தமிடுகின்றனர். கடவுள் தன்மை அதற்கு உண்டு என்பதற்காக இல்லை.

இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நமெல்லாம் அறிந்து வைத்திருக்கிற ஒரு நிகழ்ச்சியை முன்னுதாரணமாகக் கூறலாம்.

"ஆம்ஸ்ட்ராங்" தலைமையில் சென்ற குழுவினர் சந்திரனிலிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்தனர். அது சாதாரண மண் தான் என்றாலும் அயல் கிரகத்திலிருந்து அது கொண்டு வரப்பட்டதால் பல நாடுகளுக்கும் அது அனுப்பி வைக்கப்பட்டது. சென்னைக்கும் கூட அம்மண் வந்து சேர்ந்தது.

அது மண் என்று தெரிந்தும் அதைப் போய் பார்த்தவர்கள், தொட்டு முகர்ந்தவர்கள் அனேகம் பேர். இவ்வாறு செய்ததால் அம்மண்ணை அவர்கள் வணங்கினார்கள் என்று கருத முடியாது.

அது போலவே தான் அந்தக் கல் சொர்க்கத்திலிருந்து வந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதை முஸ்லிம்கள் தொட்டுப் பார்க்கின்றனர். இதைத் தவிர எந்த விதமான நம்பிக்கையும் முஸ்லிம்களின் உள்ளத்தில் இல்லை.

மேலும் ஹஜ்ஜுப் பயணம் செல்பவர்கள் அந்தக் கல்லைத் தொட வேண்டும் என்பது கட்டாயமும் அல்ல. அதைத் தொடாமலே ஹஜ் நிறைவேறி விடும்.

எந்த முஸ்லிமாவது அந்தக் கருப்புக்கல்லிடம் பிரார்த்தனை செய்தால் அது நன்மை, தீமை செய்ய சக்தி பெற்றது என்று கருதினால், நமது பிரார்த்தனையை அது செவியுறும், நமது வருகையை அறிந்து கொள்ளும் என்று நம்பினால் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறி விடுவான்.

ஆனால் லிங்கம் கடவுளின் அம்சம் என்பது இந்து சகோதரர்களின் நம்பிக்கை. அது அவர்களால் வழிபாடு செய்யப்படுகிறது. அதற்கு அபிஷேகமும் நடத்தப்படுகிறது. எனவே கறுப்புக் கல்லை முத்தமிடுவதும், லிங்கத்தைக் கடவுளாகக் கருதி வழிபாடு நடத்துவதும் ஒன்றாக முடியாது.

மேலும், லிங்கம் சொர்க்கத்திலிருந்து வந்ததாக இந்துக்கள் நம்புவதாக நமக்குத் தெரியவில்லை. அப்படி நம்பினால் உலகம் முழுவதற்கும் ஒரே இடத்தில் ஒரே ஒரு லிங்கம் தான் இருக்க வேண்டும். ஆனால் ஊர்கள் தோறும் லிங்கங்கள் உள்ளன. எனவே, அந்த இந்து சகோதரர் தவறான தகவலைக் கூறுகிறார். "ஹஜருல் அஸ்வத்" சொர்க்கத்தின் பொருள் என்று முஸ்லிம்கள் நம்புவதால் ஊர்கள் தோறும் ஹஜருல் அஸ்வத் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

சத்திய மார்க்கத்தைத் தேடிய பயணத்தில் வென்ற டாக்டர் மதுமிதா மிஷ்ரா! !!!


சத்திய மார்க்கத்தைத் தேடிய பயணத்தில் வென்ற டாக்டர் மதுமிதா மிஷ்ரா! !!!



சத்திய மார்க்கத்தைத் தேடிய பயணத்தில் வென்ற டாக்டர் மதுமிதா மிஷ்ரா!

ஒரு ஹிந்து பிராமணப் பெண்ணாக, ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் மதுமிதா மிஷ்ரா, தனது முழுக் குடும்பத்தையும் - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு காரணத்திற்காக - பகைத்துக் கொண்டுள்ளார். அந்த ஒரு காரணத்திற்காகவே உறவுகளை விடுத்து ஒதுங்கி, தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார். ஆம், நியூ டெல்...லியின் லோக் நாயக் ஜெய் ப்ரகாஷ் மருத்துமனையில் சீனியர் டாக்டராகப் பணி புரிந்து வரும் டாக்டர் மதுமிதா, தடைகள் பலவற்றை உடைத்தெறிந்து இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார், அல்ஹம்து லில்லாஹ்!

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்கள் வாசிப்பதும் இணையத்தில் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவதும் டாக்டர் மதுமிதாவின் வழக்கம். பணியின் காரணமாக, தன்னுடைய சகோதரருடன் நொய்டா நகரில் இவரும் மருத்துவரான கணவர் கொல்கத்தாவிலும் சிறிது காலம் பிரிந்து வசிக்க வேண்டிய சூழலில் ஒரு நாள் மிக யதார்த்தமாக இணையத் தளங்களை உலா வந்து கொண்டிருந்த டாக்டர் மதுமிதாவின் கண்ணில் ஆங்கில மொழியாக்கக் குர்ஆன் பிரதியொன்று எதேச்சையாகப் பட்டது.

இதைப் பற்றி மதுமிதா கூறுகையில் "அதிக மதக் கட்டுப்பாடுகளைக் கொண்ட சூழலில் நான் வளரவில்லை. ஆனாலும் எதேச்சையாகக் குர்ஆன் ஆங்கில மொழியாக்கத்தை வாசித்த எனக்கு புதியதொரு விஷயமான இஸ்லாத்தைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. என்னுடைய MD பட்டப்படிப்பினை முடித்த பிறகு எனக்குக் கிடைத்த நேரத்திலெல்லாம் இணைய தளத்தில் இஸ்லாத்தைப் பற்றி தேட ஆரம்பித்தேன்" என்றார்.

ஆர்வமிகுதியில் இஸ்லாம் தொடர்பான நிறைய புத்தகங்களையும் இணைய தளங்களையும் தொடர்ந்து வாசித்து வந்த மதுமிதா, தன் மனதில் இஸ்லாம் பற்றிய ஓர் ஐயத்தை ஆர்குட் இணைய தளத்தில் "இஸ்லாம் & முஸ்லிம்" என்ற தலைப்புள்ள கலந்துரையாடலில் சில கேள்விகளை முன் வைத்தார். அதற்கு ஃபெரோஸ் ஹுசைன் என்பவர் தொடர்ந்து பதில்கள் அளித்து வந்தாலும் அவற்றில் மதுமிதாவுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை.

திருப்தி அடையாத சூழலிலேயே அடுத்த கேள்வியான "என்னை நாடி வரும் நோயாளிகளுக்கு திருப்தியளிக்கும்படி நான் மருத்துவம் செய்வது அல்லாஹ்விற்கு சேவகம் செய்வதாகுமா?" என்பதை முன் வைத்தார்.

இக்கேள்விக்கு பெங்களூருவில் IBM நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் முகம் தெரியாத முஹம்மத் யாஸீன் என்பவர் முழுமையான விளக்கங்களை எழுதினார்.

மிகவும் திருப்தியைப் பெற்றுத் தந்த அந்த பதிலைத் தொடர்ந்து, தன் மனதில் இஸ்லாம் பற்றி எஞ்சியிருந்த கேள்விகள் அடுக்கடுக்காய் எழ, அவற்றைத் தொடர்ந்து எழுப்பினார் மதுமிதா. இறைமறை/ நபிமொழியின் வெளிச்சத்தில் அவற்றிற்குத் துல்லியமான விடைகள் கிடைத்து விட்ட திருப்தியில் மதுமிதா மனதில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. மத ரீதியிலான தடைகள், பல தயக்கங்கள் ஆகியற்றை உதறித் தள்ளி விட்டு, பதில் அளித்த முஹம்மத் யாஸீனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி தமது மகிழ்ச்சியையும் நன்றிகளையும் வெளிப் படுத்திக் கொண்டார் மதுமிதா.

"மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும் நேர்ந்து விடும். இறப்பது எப்போது என்று தெரியாத சூழலில் உடனடியாகச் சத்திய மார்க்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்" என்ற முஹம்மத் யாஸீனின் வார்த்தைகள் சத்தியத்தைத் தேடி அலைந்த டாக்டர். மதுமிதாவின் மனதை அலைகழித்தது.

----ooOoo----

குர்ஆனின் வரிகளான சத்தியம் வெல்லும் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. அதிக காலம் எடுத்துவிட்ட போதிலும் இறுதியில் அசத்தியம் தோற்றது... சத்தியமே வென்றது" என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).

குழப்பங்கள் தெளிய சிறிது தனிமையை விரும்பிய மதுமிதா சில மாதங்களில் தமது வீட்டிலிருந்து வெளியேறி கரோல்பாக் பகுதியில் உள்ள ராமானுஜன் விருந்தினர் மாளிகைக்குக் குடியேறினார். விருந்தினர் மாளிகையில் இருந்து ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு பணி நிமித்தமாக அடிக்கடி வெகு தூரம் பயணிக்க நேர்ந்தது. பயணங்களில் நிறைய வாசிப்புகளும் சத்தியத்தைத் தேடிய சிந்தனைகளுமாகக் கழிந்தன.

மனம் ஓர் உண்மையைச் சுட்டெரித்ததன் காரணமாக, கடந்த செப்டம்பர் 3, 2007 அன்று திடீரென்று ராமானுஜன் விருந்தினர் மாளிகையை விட்டு வெளியேறினார். பெங்களூருவிற்கு விமானம் ஏறினார். ஷிஃபா ஹெல்த் ஃபவுண்டேஷன் எனும் அமைப்பின் கீழ் இயங்கும் 'ஜம்மியத்துல் முஹ்ஸினாத்' பெண்கள் கல்விக்கூடத்தின் படியேறி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் (ஆனாலும் பெயரில் மாற்றம் உள்ளிட்ட பதிவுகளைச் செய்யவில்லை).

நான்கு நாட்களுக்கு பின்னர் இதனையறிந்த மதுமிதாவின் கணவரும் கண் மருத்துவருமான டாக்டர் சுபிஜே ஸின்ஹா, அருகிலுள்ள காவல் நிலையத்தில், "தன் மனைவியை பெங்களூருவைச் சேர்ந்த சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கடத்திச் சென்று விட்டதாக"ப் புகார் செய்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு உடனடியாக பெங்களூருவைச் சேர்ந்த 32 வயதான முஹம்மத் யாஸீன் மற்றும் அவர் நண்பரான 31 வயதுடைய ஷாஜி யூஸுப் ஆகிய இரு மென்பொருள் பொறியாளர்களைக் கைது செய்தது. இவர்கள் இருவரும் டாக்டர் மதுமிதாவைக் கடத்தியதாகவும் பணயத் தொகை கேட்டு டாக்டர் மதுமிதா குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டதாகவும் அவ்விருவர் மீதும் குற்றம் சுமத்தப் பட்டது.

பெங்களூருவில் இருந்த டாக்டர் மதுமிதாவை மீட்க, பெண்கள் கல்விக்கூடத்துக்குள் திடீர் சோதனை என்ற பெயரில் புகுந்த காவல் துறையினர், மதுமிதாவின் கூக்குரலுக்குச் செவி சாய்க்காமல் பலவந்தமாக அவரை டெல்லிக்கு அழைத்து வந்தனர்.

மேற்கு பெனகலில் உள்ள துர்காபூர் வீட்டில் பல மாதங்கள் மதுமிதா சிறை வைக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அவரது இஸ்லாத்தைப் பற்றிய தேடல்களுக்கும் சிந்தனைகளுக்கும் சிறையிட யாராலும் முடியவில்லை. கடந்த வருடம் 2008 மார்ச் மாதம், தயக்கத் தளைகளை அறுத்தெறிந்து விட்டு, முழுமையாக இஸ்லாத்தைத் தழுவினார். மதுமிதா மிஷ்ரா என்ற தமது பெயரை மாற்றி சந்தோஷமாக ஜைனப் எனத் தேர்வு செய்து, இயற்கை மார்க்கத்திற்குத் திரும்பினார்.

"வெயிலில் இருந்து பாதுகாக்க சன் ஸ்க்ரீன் அணிந்து சருமத்தைப் பாதுகாப்பது போன்று ஹிஜாபில் எனது பெண்மைக்கு முழுப் பாதுகாப்பு உள்ளதென்று கருதுகிறேன். இஸ்லாத்தை ஏற்றதன் மூலம் என் குடும்பத்தினரை இழந்து விட்டேன். ஆனால் நான் நிர்க்கதியாய் இல்லை. நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளன. இஸ்லாத்தை அறியும் முயற்சியில் என்னுடைய முழு நேரத்தைச் செலவு செய்து வருகிறேன்" என்று உறுதியுடன் பேசுகிறார் டாக்டர் மதுமிதா என்ற ஜைனப்.

----ooOoo----

ஜம்மியத்துல் முஹ்ஸினாத் பெண்கள் கல்விக்கூடத்திலிருந்து தன்னைப் பலவந்தமாக அழைத்து வந்த பின்னர், "முஹம்மது யாஸீனும் ஷாஜி யூஸுஃபும் குற்றவாளிகள்" என்ற தொனியில் ஒரு புகார் எழுதித் தருமாறு டெல்லி காவல்துறையினர் தம்மைத் தொடர்ந்து வற்புறுத்தியதாகக் கூறுகிறார். தன்னை அவ்விருவரும் கடத்தியதாகவும் பிணைத் தொகையாகப் பத்து இலட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் வளைகுடா நாட்டில் பெரிய சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டியதாகவும் காவல்துறை போலியாகத் தயாரித்திருந்த அந்தப் புகாரில் அபாண்டமாக எழுதப் பட்டிருந்தது என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).

ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது முழுக்க முழுக்க தமது விருப்பத்தின் பெயரிலேயே என்றும் தம்மை எவரும் கட்டாயப் படுத்திடவில்லை என்றும் தெள்ளத் தெளிவாகவும் உறுதியாகவும் CrPC செக்க்ஷன் 164 இன்படி எழுதிக் கையொப்பமிட்டுள்ளார் டாக்டர் ஜைனப். விசாரணையில் வெட்ட வெளிச்சமான பொய்களுக்குப் பின்பு, நீதிமன்ற உத்தரவின்படி வேறு வழியின்றி அப்பாவிகளான பொறியாளர்கள் இருவரையும் விடுதலை செய்துள்ளனர் டெல்லி காவல் துறையினர்.

"முஹம்மத் யாஸீனும் ஷாஜி யூஸுஃபும் கடந்த வாரம் விடுதலை செய்யப் பட்டது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! குர்ஆனின் வரிகளான சத்தியம் வெல்லும் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. அதிக காலம் எடுத்துவிட்ட போதிலும் இறுதியில் அசத்தியம் தோற்றது... சத்தியமே வென்றது" என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).

இஸ்லாத்தைத் தாம் விருப்பப்பட்டு ஏற்ற ஒரே காரணத்துக்காக டெல்லி காவல்துறையின் பிரத்யேக சிறைச்சாலைக்கும் விசாரணை அறைகளுக்கும் நீதி மன்றங்களுக்கும், தான் அலைக்கழிக்கப் பட்டதை நினைவு கூர்கிறார் மதுமிதா.

கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்திய கடந்த இரு வருடங்களைத் தாம் மறக்க விரும்புவதாகக் கூறுகிறார் டாக்டர் ஜைனப். "மன்னிப்பதை இஸ்லாம் போதிக்கிறது. அபாண்ட பழிகளைச் சுமத்தி இரு அப்பாவிகளின் குடும்பத்தினரை அவதிக்குள்ளாக்கிய என்னுடைய மாஜி கணவரையும் அவரோடு கைகோத்துக் கொண்டு தவறிழைத்த காவல் துறையினரையும் நான் ஏற்கனவே மன்னித்து விட்டேன்" என்றார் டாக்டர் ஜைனப்
 
நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்







Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.

அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்.

ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.

இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.

லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்…..

SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER

சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்…

Laptop Configuration

Processor

Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.

எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ

Intel Core i7
Intel Core i5
Intel Core i3

என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.

Intel® Core™ i7-640M Processor 2.80 GHz

அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.

RAM

அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).

HARD DISK

அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.

நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.

ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.

எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம்.

பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.

DVD DRIVE

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

GRAPHIC CARD

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.

சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ?

நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.

இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.

இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.

இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.

ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.

அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.

Operating System ( OS)

விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.

இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.

Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version

இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு.

இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.

Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.

அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது. இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.

இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.

Sunday, 4 November 2012

திருமணத்தில் தீய பழக்கங்கள்...

அஸ்ஸாலாமு அலைக்கும்...

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மைய
ான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் பலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம்.

ஒரு மணப்பந்தலை அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரித்து மணமக்களை அமரவைத்து குடும்பத்தினர் அனைவரும் மாறி மாறி போட்டோ எடுப்பதும் ஆடல் பாடல் என்று கும்மாளமிடுவதும் சர்வசாதாரணமாக பல திருமணங்களில் காணலாம். இங்கேயும் எந்த பாகுபாடுமின்றி மஹ்ரம் பேணப்படுவது கிடையாது. வருகிறவர் போகிறவர் நண்பர்கள் அனைவரும் மணமக்களை பார்த்து ரசிப்பது பெரும் வேதனைக்குரிய செயலாகும். தனது மனைவியின் அழகை தான் மட்டும் ரசிக்காமல் ஊருக்கே ரசிக்கச் செய்யும் இவர்களும் முஸ்லிமான ஆண்களா?

மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து மணப்பெண் கழுத்தில் ‘தாலிகட்டும்” வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும் கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவணுக்குச் சமமான மகிமை அளிப்பதும்-

திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய்க்கும் வாழைப் பழத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதும் மணமக்களைச் சுற்றி கூட்டமாகக் கூடி நின்று கும்மாளம் போடுவதும் பரிகாசம் என்னும் பெயரில் பருவப் பெண்கள் ஒன்று சேர்ந்து மணமகனைக் கேலி செய்வதும் வெற்றிலை வைத்து ஆரத்தி எடுப்பதும் எங்கே போய்க் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்?

சமுதாயம் சீர் பெற இது போன்ற சடங்கு சம்பிரதாயங்களைக் களைய வேண்டும். சத்தியத் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பெருமைக்காகவும் ஆடம்பரத்துக்காகவும் செய்யும் வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். அப்போது தான் ஏழ்மையான மக்களின் சிரமங்களைக் குறைக்க முடியும்.

‘குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரக்கத் நிறைந்ததாகும்.” என்பது நபி மொழி. (அறிவிப்பவர். ஆயிஷா (ரலி) ஆதாரம் அஹ்மத்)

வரதட்சனை என்னும் வன்கொடுமை ஒழிய வேண்டும். சீர் வரிசை என்னும் பெயரில் பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கும் பாதகர்கள் திருந்த வேண்டும்.

கல்யாணத்திற்காகக் காத்திருக்கும் ஏழைப் பெண்களின் கண்ணீரைத் துடைக்க இறையச்சமுள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும்.

வரதட்சனை ஒரு மாபெரும் கொடுமை என்பதை உணர்ந்த ஏராளமான இளைஞர்கள் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்யத் தயாராகி விட்டனர்.

என்றாலும் இது ஒரு சாதனை அல்ல. மணப் பெண்ணுக்கு உரிய மஹர் தொகையைக் கொடுத்து மணம் முடிக்க வேண்டும். இதுவே மார்க்கச் சட்டம்.

சிலர் மஹர் என்னும் பெயரில் சொற்பத் தொகையை நிர்ணயித்து அதையும் கொடுக்காமல் பள்ளிவாசலின் பதிவுப் புத்தகத்தில் பெயரளவில் எழுதி வைத்து விட்டு கட்டிய மனைவியிடம் கடன்காரனாகக் காலத்தைக் கழிக்கிறார்கள்.

மஹர் தொகையைக் கொடுக்காமல் கடன் காரனாக இருப்பவர்கள் இப்போதாவது கொடுத்து விட வேண்டும். மஹர் தொகையை இப்போது கொடுப்பதால் ‘தலாக்” ஆகி விடும் என்று சிலர் கருதுகின்றனர். இது மிகவும் தவறான நம்பிக்கை. அறியாமல் செய்த தவறுகளுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.

இவ்வளவு அனாச்சாரங்கள் அரங்கேரும் போதும் உலமாக்கள் என்று சொல்லுபவர்கள் உக்கார்ந்து மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு வருகிறார்கள் என்றால் இதுதான் இஸ்லாத்தை போதிக்கின்ற முறையா? திருமணத்தை எதிர்நோக்குகின்ற ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தனது திருமணம் ஆடம்பரமில்லாமல் நடைபெற உதவிபுரிய வேண்டும். ஊர் வழமை, சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தையும் உடைத்தெரிந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் வழிகாட்டிய திருமணத்தை, எளிய திருமணத்தை நடத்திக்காட்டி சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்

சூப்பர் விமானங்கள்

விமானப்பயணம் என்றால் யாருக்குத்தான் ஆசை இருக்காது. அதிகமான கட்டணம் காரணமாக விமானப்பயணம் என்பது சாமானியருக்கு எட்டாக்கனியாக இருந்தது. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள ‘விலை குறைப்பு’ நடவடிக்கை மூலம் குறைந்த கட்டணத்தில் வி
மான பயணத்தை அனுபவிக்கும் வாய்ப்பு நடுத்தர மற்றும் சாதாரண வர்க்கத்தினருக்கும் கிடைத்துள்ளது.

விமானப் பயணம் ஒரு சிலருக்கு திகில் நிறைந்ததாகவே இருக்கிறது. நடு வானில் பறந்து கொண்டிருக்கும் போது ஏதாவது ஆகிவிட்டால் என்ன ஆகுமோ? என்ற மனபயம் காரணமாக விமானத்தில் ஏற மறுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் விமானப்பயணம் சொகுசு நிறைந்தாலும் அவ்வப்போது நடைபெறும் சில விபத்துகளால் பாதுகாப்பான விமானப்பயணம் பற்றிய ஆய்வுகள் தீவிரம் அடைந்து வருகின்றன.

இந்த ஆய்வுகள் மூலம் நமக்கு கிடைத்துள்ளவை தான் ‘சூப்பர் விமானங்கள்’ இன்னும் சில ஆண்டுகளில் விண்ணில் சாகசம் நிகழ்த்தப் போகும் இந்த சூப்பர் விமானங்கள் பற்றிய தகவல்களை இந்த இதழில் காண்போம்.

‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்,’ என்று கவிஞர் எளிதாக பாடிவிட்டார். ஆனால் இந்த அலுமினியப் பறவையை உருவாக்குவதற்கு மேற்கொண்ட தியாகங்கள் பல உண்டு.

ரைட் சகோதரர்கள் விமானத்தை உருவாக்கி பறக்க முயற்சி செய்தபோது, ‘இவன் பறக்கப் போகிறானாம்’ என்று கிண்டலாக பலர் பேசினார்கள். இதை எல்லாம் பொருட்படுத்தாமல் தங்களது முயற்சியில் தீவிரம் காட்டி விமானத்தில் பறந்த போது விமானம் செய்தவர்கள் வாயடைத்து அதிசயித்து போனார்கள்.

விமானம் பறக்க ஆரம்பித்து 100 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்த கால கட்டத்தில் விமானங்களின் வடிவம் செயல்பாடுகள் பலவாறாக மாறிவிட்டது. மனிதனின் ஆராய்ச்சியின் பலனாக இன்று பல புதிய ரக விமானங்கள் கம்பீரமாக விண் வெளியை ஆண்டு கொண்டிருக்கிறது. இருந்தாலும் அவ்வப்போது நடைபெறும் சில விபத்துக்கள் மக்கள் மனதில் விமான பயணம் பற்றிய பயத்தை உருவாக்கி விடுகிறது.

இந்த பயத்தை போக்கும் வகையில் விபத்தில் சிக்காத வகையில் அதாவது நடுவானில் பறக்கும் போது எந்த கோளாறும் ஏற்படாத வகையில் நவீன விமானங்களை உருவாக்கும் ஆய்வுகள் தீவிரம் அடைந்துள்ளன. அதி நவீன தொழில் நுட்பம், சக்தி வாய்ந்த துல்லியமான கம்ப்யூட்டர் கருவிகள், அதிவேகம் எரிபொருள் சிக்கனம், குறைவான இரைச்சல் போன்ற அம்சங்கள் நிறைந்ததாக சூப்பர் விமானங்கள் தயாராகி வருகின்றன.

அதில் ஒன்று தான் ‘எலாஸ்டிக் விங்’ எனப்படும் வளையும் தன்மை கொண்ட இறக்கை பொருத்தப்பட்ட விமானம். அது பற்றி காண்போம்.

எலாஸ்டிக் இறக்கை

வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் சில நேரங்களில் ‘ஹேங்’ ஆகி விடுவதுண்டு. அதாவது மென்பொருள் அல்லது வன்பொருள் (சாப்ட்வேர் அல்லது ஹார்டுவேர்) கோளாறு காரணமாக கம்ப்யூட்டரின் இயக்கம் ஸ்தம்பித்து விடும். இது போன்ற நேரங்களில் அந்த கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் எனப்படும், மீண்டும் இயக்கும் முறை மூலம் இயக்க வைப்போம். இது சாதாரணமாக கம்ப்யூட்டர்களில் ஏற்படும் கோளாறுகளில் ஒன்றாகும்.

அதே நேரத்தில் பல ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் போது ஒரு விமானத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் கம்ப்யூட்டரில் இது போன்ற கோளாறு ஏற்பட்டால் என்ன ஆகும்? விமானம் நிலை குலைந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் நிலை உருவாகும். இது போன்ற ஆபத்துக்கள் எதுவும் ஏற்படாத வகையில் விமானங்களை தயாரிப்பது குறித்து தீவிரமாக ஆய்வுகள் நடந்து வருகிறது.

விமானங்கள் தயாரிப்பதில் புகழ் பெற்ற ‘போயிங்’ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான ‘நாசா’ ஆகியவை இணைந்து இது தொடர்பாக ஆய்வுகள் நடத்தின. இந்த ஆய்வுக்காக அமெரிக்க ராணுவத்தின் எப்ஃஏ18 ரக போர் விமானத்தை எடுத்துக் கொண்டனர். இந்த விமானத்தின் கம்ப்யூட்டர் கருவிகள், இறக்கை அமைப்புகள் போன்றவற்றில் மாற்றங்கள் கொண்டு வந்து சோதனையிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த ஆய்வுத் திட்டத்துக்கு ‘வானூர்தி பொருள் மீள்மையியல் இறக்கைத் திட்டம் என்று பெயரிட்டுள்ளனர். இந்த ஆய்வின் மூலம் விமான இறக்கை வடிவமைப்பில் இருந்து வரும் தொழில் நுட்பங்களை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளனர்.

சாதாரணமாக விமானங்கள் பறக்கும் போது இடது அல்லது வலது புறமாக திரும்ப வாலிற்கு மற்றும் ‘பிளாப்ஸ்’ போன்ற கட்டுப்பாட்டு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை விமானத்தின் இறக்கையின் முன் மற்றும் தொடர் முனைகளில் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த கட்டுப்பாடு சாதனங்கள் மேலும், கீழும் இயக்கப்பட்டு இதன் மூலம் மாறுபடும் இறக்கையின் தூக்கு விசையினால் விமானம் இடமாகவோ, வலமாகவோ திரும்புகிறது.

ஆனால் புதிய ‘எலாஸ்டிக் இறக்கை’ முறையில் விமானியின் (கம்ப்யூட்டர்) கட்டளைக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மை கொண்ட இறக்கைகள் இடது_வலது என வளைந்து கொள்ளும். இதன் காரணமாக விமான இறக்கைகளில் வாலிறகு மற்றும் ‘பிளாப்ஸ்’ பொருத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் வளையும் தன்மை கொண்ட இறக்கை மூலம் விமானத்தின் மொத்த எடையில் கணிசமான பகுதி குறைகிறது. விமானத்தின் எடை குறைய குறைய எரிபொருள் செலவும் குறைகிறது.

உதாரணமாக ஒரு ஜாம்போ ஜெட் விமானத்தின் மொத்த எடையில் 10 சதவிகிதம் குறைத்தால் அந்த விமானத்திற்கு ஒரு ஆண்டுக்கு ஆகும் எரிபொருள் செலவில் ரூ.6 கோடியே 58 லட்சம் மிச்சமாகும்.

‘எலாஸ்டிக் இறக்கை’ திட்டத்தின் ஆய்வுப் பணிகள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ஆரம்ப கட்ட சோதனைகள் கடந்த வருடம் நடந்தது. இதில் விமானத்தை கட்டுப்படுத்துவதற்கு இறக்கைகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, இறக்கையில் ஸ்டிரெயின் காஜ் பயன்படுத்தி அதன் இயக்கங்களை கண்காணித்தனர்.

எலாஸ்டிக் இறக்கைகள் பொருத்தப்பட்ட எப்ஃஏ18 விமானங்களின் இயக்க சோதனை விரைவில் நடக்க இருக்கிறது. இந்த சோதனை தொடங்கும் முன்பு ‘கம்ப்யூட்டர் மூலம் விமானத்தை கட்டுப்படுத்தும் முறை’யின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானிக்கு எந்த ஒரு பயமும் இன்றி விமானத்தை இயக்கும் ஆர்வம் ஏற்படும்.

எப்ஃஏ18 விமானத்தில் மோட்ட ரோலா 68040 ரக சி.பி.யு. பயன்படுத்தப்படுகிறது. மொத்தம் சி.பி.யு.க்கள் ஒருங்கிணைந்து விமானத்தின் இயக்கத்தை கண்காணித்து கட்டுப்படுத்தும். ஒரு வேளை கம்ப்யூட்டரில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் விமானிக்கு அது உடனே தெரிவிக்கப்படும். இதையடுத்து அவர் விமானத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இயக்கும் வசதிகளும் பொருத் தப்பட்டுள்ளது.

தகவல் தொகுப்பு: எம்.ஜே.எம்.இக்பால்,துபாய்.
விமானத்தில் பேஷன் ஷோ

எதையும் புதுமையாக செய்ய வேண்டும் என்பதில் தணியாத ஆர்வம் உள்ளவன் மனிதன். அவனது புதுமையான தேடலின் வடிவம் தான் இங்குள்ள படம். வண்ண ஒளி விளக்குகளின் மத்தியில் பேஷன் ஷோக்களை நடத்தியவர்களுக்கு வித்தியாசமான எண்ணம் தோன்றியது. இதைத்தொடர்ந்து பறக்கும் விமானத்தில் பேஷன் ஷோ ஒன்றை நடத்தினார்கள். இந்தோனேஷியாவில் கடந்த ஆண்டு ஜகார்த்தா – பாலி இடையே பறந்த பயணிகள் விமானத்தில் ஒரு பேஷன் ஷோ நடத்தி கலக்கிவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாடல் அழகிகள் விதவிதமான உடை அணிந்து வந்து பயணிகளை கவர்ந்தனர்